அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்.

Published Date: June 18, 2025

CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஐடிஎன்டி மையம் மூலம் தொழில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:

தமிழகத்தை உலகின் முதல் 10 புத்தாக்க மையங்களில் ஒன்றாக உயர்த்துவதே நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி ஹப்)கடந்த 2023 உருவாக்கப்பட்டது. இந்த மையம் வளர்ந்து வரும் தொழில்நுட்ப  புத்தொழில் நிறுவனங்களை முன்தொழில் வளர்காப்பகம் (4 வார காலதிட்டம்), தொழில்வளர்காப்பகம் ( 12 முதல் 18 மாத கால திட்டம் ), தொழில் மேம்பாட்டு திட்டங்கள் (16 வார கால திட்டம் )மூலம் ஊக்குவித்து வருகிறது.

பயிற்சி பட்டறைகள்:

அந்த வகையில் தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வணிக ஆய்வுகளுக்காக முகாம், வணிக கோட்பாடுகள் மற்றும் புத்தாக்க எண்ணங்களை செம்மைப்படுத்துவதற்காக பயிற்சி பட்டறைகள் முதல் தொழில் வளர்க்காப்பகம் (பேகான்) மூலம் நடத்தப்பட்டு 57 குழுக்கள் பயிற்சியை முடித்துள்ளன. அதேபோல, புத்தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை சரிபார்க்கவும் வளர்த்து கொடுக்கவும் தொழில் வளர்காப்பகம்  (பாத் ஃபைண்டர்) உதவுகின்றன.

புத்தகம் சார்ந்த தொழில்நுட்பத்தை வளர்க்கும் விதமாக ஆய்வகங்கள், உற்பத்தி வழிகாட்டுதல்கள், நிதி திரட்டுதல், உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் தொழில் வளர்க்கும் தொடக்க நிலையில் உள்ள 56 புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர். சந்தை அணுகல் , மூலதனம், தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவை மூலமாக புத்தொழில் முனைவோர் இடையே போட்டித் தன்மையை அதிகரித்தல், முதலீடுகளை ஈர்த்தல், நிறுவனங்களை விரிவாக்குதல் ஆகியவற்றிற்கு தொழில் மேம்பாட்டு திட்டம் (ஐ - ஆசிரலரேட்) உதவுகிறது.

விண்வெளி தொழில்நுட்பம்:

இதன் மூலம், 25 வளர்ச்சி அடைந்த புத்தொழில் நிறுவனங்கள் பயன்பெறுகின்றன. அதே போல டீப் - டெக், ரோபோட்டிக்ஸ், செமி கண்டக்டர், குவாண்டம், செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர்தொழில்நுட்பம், எலக்ட்ரானிக் வாகன உற்பத்தி, விண்வெளி தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்டவைகளும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Media: Hindu Tamil